image

கடின சொற்களை மொழிபெயர்ப்பதற்கான உதவி வழங்கலும் பெறுதலும்

KudoZ வலையமைப்பு மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஏனையோருக்கும் சொற்களினதும் சிறு சொற்றொடர்களினதும் மொழிபெயர்ப்புகள் அல்லது விளக்கவுரைகள் மூலம் உதவுவதற்கான கட்டமைப்பொன்றை வழங்குகிறது. இன்று வரை 3,905,313 மொழிபெயர்ப்புக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அக்கேள்விகள் அனைத்தும் அவற்றுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளும் பயன் மிக்கதான தேடத் தக்க சுவடிக்கூடம் கொண்டுள்ளது.


image

மொழி வல்லுனர்களை வாடகைக்கமர்த்துவதுடன் புதிய வாடிக்கையாளர்களைச் சந்திக்க

மொழிபெயர்ப்பாளர்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு ProZ.com தளம் முதல் தர வளம் ஆகும். இதன் வேலைத் தளத்தில் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு வேலைகள் இடப்படுவதுடன் விருப்பமான பங்காளர்கள் அவற்றுக்கு மனுக் கோரலாம். வேலையிடல் முறைக்கு மேல் மிகுதமாக, மொழி வல்லுனர்களைக் கண்டுகொள்ள உதவுவதான தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளரினதும் உரைபெயர்ப்பாளரினதும் தேடத் தக்க விபரக்கொத்து ஒன்று காணப்படுகிறது.


image

ProZ.com நிகழ்வுகளுக்குச் சமுகமளிக்க - மாநாடுகள், பயிற்சிகள் மற்றும் சமூக மன்றங்கள்

ProZ.com மாநாடுகள், பயிற்சி நெறிகள் (இணையவழி மற்றும் இணையமில்) மற்றும் (அண்மித்து வாழும் ProZ.com பயனர்களின் உத்தியோகபூர்வமற்ற ஒன்றுகூடல்களான) சமூக மன்றங்கள் என்பன ஆங்காங்கே இடம்பெறுகின்றன. இந்நிகழ்வுகள் உங்களது திறமைகளை விரிவு படுத்தவும் புதிய வல்லுனர்களைச் சந்திக்கவும் களிப்படையவும் உங்களுக்கு நல்வாய்ப்புகளாகும்!


image

வேலை வழங்குநர் பற்றிப் பின்னூட்டங்களை இடுக, ஏனையோர் இட்ட பின்னூட்டங்களை வாசிக்க

Blue Board என்பது சேவை வழங்குநரால் இடப்பட்ட பின்னூட்டங்களுடன் மொழி வேலை தருநர் பற்றித் தேடத் தக்க தரவுத்தளம் ஆகும். ProZ.com பயனர்கள் தாம் வேலை செய்த குறிப்பிட்ட வேலை தருநர் மீது "மீண்டும் வேலை செய்யும் சாத்தியம்" பற்றி தாம் விரும்பிய அளவில் 1 முதல் 5 வரையான எண்களாலும் சிறிய கருத்துரைப் பகுதியாலும் குறிப்பிட அனுமதிக்கப்படுவர். 15,000க்கு மேற்பட்ட வேலை தருநர்கள் பதியப்பட்டிருப்பதால் புதிய வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து வேலையொன்றைப் பொறுப்பேற்க முன்னர் Blue Board ஐ அணுகுவது நற்பழக்கமாகும்.


image

ஏனைய வல்லுனர்களுடன் மொழிபெயர்ப்புத் தொடர்பான கேள்விகளைக் கலந்துரையாடல்

மொழிபெயர்ப்பாளர் அல்லது உரைபெயர்ப்பாளர் ஒருவர் என்ற வகையில் உள்ளூராக்கம், க.சா.மொ. கருவிகளின் தொழிநுட்ப உதவி, நிறுவனமாக்கல், வசனம் அமைத்தல் என்பன தொடர்பில் கலந்துரையாடல்.


All of ProZ.com
  • All of ProZ.com
  • சொல் தேடுக
  • வேலைகள்
  • மன்றங்கள்
  • Multiple search