விதிமுறைகள்
ProZ.comமை பயன் படுத்துவதற்கான விதிமுறைகள்
ProZ.comமின் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் சந்தோஷமான, விடைகளை நோக்கிச் செல்லும் சூழ்நிலையை நீட்டிக்க மற்றும் பாதுகாக்க பின்வரும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. தளத்தை பயன்படுத்துவதின் மூலம், நீங்கள், இந்த விதிமுறைகளை ஏற்று மற்றும் ஒப்புக்கொண்டு, அதன் படி நடந்து கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.
பிரிவு
தள விதிமுறை
2.1 |
மற்ற மூலவளங்கள் கிடைக்காத போது மட்டும் தான் KudoZ உதவியைக் கோர வேண்டும்.
கிடைக்கும் மூலவளங்களை KudoZ வரலாற்று ஆவணங்களை உள்ளிட்டிருக்கிறது (KudoZ > ProZ.com ன் முதன்மையான மெனுவிலிருந்து சொற்றொடர் தேடுதல்), அகராதிகள், தேடுதல் இயந்திரங்கள், போன்றவை. மொழிபெயர்ப்பாளர்கள் வேறொரு இடத்தில் காணப்பட்டிருப்பினும் ஒரு KudoZ கேள்வி பதிப்பித்திருந்தால், மற்ற இடத்தில் காணப்பட்ட தகவலோடும் தேடுகின்ற வேறு தகவலோடும் ஒரு விளக்கத்தைச் சேர்க்க வேண்டும். |
2.2 |
KudoZ வாயிலாக மொழிபெயர்ப்புக்கு பதிப்பிக்கும் பனுவல்கள் ஏறக்குறைய பத்து (10) சொற்களுக்குள் வரையறுக்கப்பட வேண்டும்.
நீண்ட பனுவல்களுக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பாளரை தேர்ந்தெடுக்க, தகவல் பட்டியல் அல்லது வேலை பதிப்புமுறையைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றனர். |
2.3 |
ஒரு கேள்விக்கு ஒரு சொல் மட்டும் தான் அனுமதிக்கப்படும்.
ஒரு KudoZ கேள்விக்கு பல்வேறு மொழிபெயர்ப்புகளை கொடுத்தால், அருஞ்சொல் அகராதியில் உள்ளீடுகள் செய்வதற்கு குறுக்கீடாக இருக்கும். |
2.4 |
ஒவ்வொரு கேள்விக்கும் அதற்கான சூழல் தேவையான அளவு கொடுக்க வேண்டும்.
சூழல் இல்லாத நிலையில், எடுத்துக்கொண்ட துறை மற்றும் ஆவணத்தின் வகை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். சொல் வருகின்ற இடத்தில் வாக்கியங்கள் அல்லது பாராக்களை உள்ளிடுவது பயனுள்ளதாக இருக்கும். |
2.5 |
KudoZ கேள்விகள் சரியான முறையில் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு கேள்வியை பதிப்பிக்கும் போது, மொழி இணைகளின் தேர்வு, வகை (PRO அல்லது Non-PRO), பொது மற்றும் விரிவான துறைகள் ஆகிய மிகவும் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட துறை பொருத்தமாக இருக்கும் போது "பொது" மற்றும் "பிற" துறைகள் உபயோகிக்கக்கூடாது. |
2.6 |
கேள்வி கேட்பவர்கள் கேள்விகளை மூட வேண்டும்.
மிகவும் பயனுள்ளதாக இருந்த பதிலை தேர்ந்தெடுத்து கேள்விகளை மூடவும் (“புள்ளிகளுக்கல்ல” என்று அந்தக் கேள்வி இல்லாமல் இருந்தால் அதற்கு புள்ளிகள் கொடுக்கவும்). ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தங்களது கேள்விகளை மூடாத கேள்வி கேட்பவர்கள், மேற்கொண்டு கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். (எந்தவொரு பதிலும் பயனுள்ளதாக இல்லாவிடில், எதனையும் தேர்ந்தெடுக்காமல் மூடிவிடலாம்.) |
2.7 |
கேள்வி மூடிவிட்ட பிறகு அருஞ்சொல் அகராதியில் உள்ளீடு செய்ய வேண்டும்.
ஒரு கேள்வி மூடப்பட்டவுடன், கேள்வி கேட்டவர் அதை அருஞ்சொல் அகராதியில் உள்ளீடு செய்ய வேண்டும்--- கொடுக்கப்பட்டுள்ள பாரத்தில் மூலம் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட சொற்கள் இரண்டையும் அகராதி வடிவில் கொடுக்க வேண்டும். அருஞ்சொல் அகராதியில் சேர்ப்பதற்கான தகுதி இல்லாதவை நிராகரிக்கப்படும். |
2.8 |
ஒரு நாளில் மற்றும் ஒரு வாரத்தில் பதிப்பிக்க முடிகின்ற KudoZ கேள்விகளின் எண்ணிக்கை மீது கட்டுப்பாடு உள்ளது.
கேள்வி கேட்பவரின் உறுப்பியத்தைப் பொருத்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகளை மீறக்கூடாது. |
2.9 |
Guidelines:
"Help" KudoZ should be used for requesting terms help after having searched the KudoZ term search and other resources. When asking a question, sufficient context should be provided. Even when there is no other context, the subject area and type of document should be indicated. It can be helpful to enter sentences or paragraphs where the term in question occurs. See a more detailed description here. |
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றுவது, தளத்தை பயன் படுத்துவதை மற்றும் அணுகு உரிமையை தொடர்ந்து பயன் படுத்துவதற்கான நிபந்தனையாகும்.
Enforcementமேற்கண்ட விதிமுறைகளை அமுல் படுத்த, ஊழியர்கள் மற்றும் தள விதிகளை அமுல்படுத்துபவர்கள்(moderators) பின்வரும் நடவடிக்கைகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்:
* குறிப்பிட்ட விதிமுறைகள் குறித்து, தளத்தை உபயோகிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க தொடர்புகொள்வது
* விதிமுறையை மீறிய சமர்பணத்திற்கு அனுமதி அளிப்பதை தவிர்ப்பது (அல்லது நீக்குவது/மறைப்பது)
* குறிப்பிட்ட உபயோகிப்பாளர்கள், குறிப்பிட்ட செயல்பாட்டை மேற் கொள்ளும் பொழுது, விதிமுறை தொடர்பான தகவலை தோன்ற வைப்பது
* தள சிறப்பம்சங்கள் விதிமுறையை மீறி பயன் படுத்தப் பட்டால் அவற்றை அணுகுவதற்கான உரிமையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்குவது.
* சுருக்கமான தனிக்குறிப்பு அல்லது உறுப்பினர் தகுதியை இரத்து செய்வது (ஊழியர்கள் மட்டும்)
Termination
தீவிரமாக மீறப்படும் அரிய சந்தர்பங்களில், ProZ.com ஊழியர்கள் உடனடியாக சுருக்கமான தனிக்குறிப்பை(மற்றும் உறுப்பினர் தகுதியை) நீக்கலாம். பெரும்பாலான சமயங்களில், எது எப்படியானாலும், ProZ.com "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை" கொள்கை ஒன்றை பயன் படுத்துகிறது, அது நீக்குவதற்கு, கால்பந்து விளையாட்டில் உபயோகத்தில் இருக்கும், "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை"யை பயன் படுத்தும் முறையைப் போன்றது.
மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டைகள் ஊழியர்களால் மட்டுமே கொடுக்கப் படுகிறது. விதிமுறைகள், எண்ணினால் எடுத்துக்காட்டப் படுகின்றன, அட்டை காண்பிக்கப் பட்டது குறி்த்து வைத்துக் கொள்ளப் படும். "மஞ்சள் அட்டை" அல்லது "சிகப்பு அட்டை" எனும் சொற்கள் வெளிப்படையாக பயன் படுத்தப் படுகின்றன; மின்அஞ்சல் ஒன்று அனுப்பப் பட்டால், தலைப்பு வரியில், சொற்கள் தோன்றும்.
மஞ்சள் அட்டை வழங்கப் பட்ட-தளத்தை உபயோகிப்பவர், தளத்தை உபயோகிப்பதைத் தொடரலாம் (சில சமயங்களில் சில கட்டுப்பாடுகளுடன்), ஆனால், மற்றபடி, மேற்கொண்டு மீறினால் அது நீக்குவதில் சென்று முடியும் எனும் அறிக்கையின் கீழ் இருப்பார்கள். ஒரு நபரின் சுருக்கமான தனிக்குறிப்பு நீக்கப் பட்டால் ProZ.comமிற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.
Clarification
மேலே சொல்லப் பட்ட விதிமுறைகள் அல்லது விதிமுறைகள் அமுல் படுத்தப்படுவது குறித்து விளக்கம் தேவைப் பட்டால், தயவு செய்து உதவி வேண்டி மனுவை சமர்ப்பியுங்கள்.