விதிமுறைகள்
ProZ.comமை பயன் படுத்துவதற்கான விதிமுறைகள்
ProZ.comமின் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் சந்தோஷமான, விடைகளை நோக்கிச் செல்லும் சூழ்நிலையை நீட்டிக்க மற்றும் பாதுகாக்க பின்வரும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. தளத்தை பயன்படுத்துவதின் மூலம், நீங்கள், இந்த விதிமுறைகளை ஏற்று மற்றும் ஒப்புக்கொண்டு, அதன் படி நடந்து கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.
பிரிவு
தள விதிமுறை
1.1 |
KudoZ சொற்களின் உதவிக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்கள், பேச்சுவார்த்தைகள், அல்லது உதவி கொடுப்பது அல்லது பெறுவதைத் தவிர்த்து வேறு வகையில் இந்தத் தளத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. |
1.2 |
KudoZ மொழி அளவில் குறுகியது.
KudoZ-சம்பந்தமான பதிப்புக்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். மற்ற இடங்களில் இருப்பதைப் போன்றே KudoZ ல் தனிப்பட்ட கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கப்படுகிறது. |
1.3 |
1.3. பனுவல் வட்டங்கள் அதற்குரிய காரணங்களுக்கு மட்டிலும் தான் பயன்படுத்த வேண்டும்.
உதாரணத்துக்கு:
|
1.4 |
அருஞ்சொல் அகராதியின் வடிவம் நிலைநாட்டப்பட வேண்டும்.
KudoZ கேள்விகள் மற்றும் பதில்களிலிருந்து சொற்றொடர்களின் நகல் உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக, “கீழே பார்க்கவும்” போன்ற விளக்கங்கள், சொற்களை பதிப்பிக்கும் போதோ அல்லது மொழிபெயர்ப்புக்களை பரிந்துரைக்கின்ற பொழுதோ, கொடுக்கப்பட்டிருக்கும் வட்டங்களில் உள்ளிடக்கூடாது. கேள்விக்குறிகள், மேற்கோள் குறிகள், தேவையற்ற பெரிய எழுத்துக்கள் மற்றும் ஓர் அகராதியில் காணப்படாத எவையேனும், உள்ளிடப்படக்கூடாது. |
1.5 |
Care should be taken not to disclose confidential information in KudoZ postings.
In most cases, client names should not be disclosed in a KudoZ posting. Consideration should also be given to whether the term or context would disclose confidential information by its nature. |
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றுவது, தளத்தை பயன் படுத்துவதை மற்றும் அணுகு உரிமையை தொடர்ந்து பயன் படுத்துவதற்கான நிபந்தனையாகும்.
Enforcementமேற்கண்ட விதிமுறைகளை அமுல் படுத்த, ஊழியர்கள் மற்றும் தள விதிகளை அமுல்படுத்துபவர்கள்(moderators) பின்வரும் நடவடிக்கைகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்:
* குறிப்பிட்ட விதிமுறைகள் குறித்து, தளத்தை உபயோகிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க தொடர்புகொள்வது
* விதிமுறையை மீறிய சமர்பணத்திற்கு அனுமதி அளிப்பதை தவிர்ப்பது (அல்லது நீக்குவது/மறைப்பது)
* குறிப்பிட்ட உபயோகிப்பாளர்கள், குறிப்பிட்ட செயல்பாட்டை மேற் கொள்ளும் பொழுது, விதிமுறை தொடர்பான தகவலை தோன்ற வைப்பது
* தள சிறப்பம்சங்கள் விதிமுறையை மீறி பயன் படுத்தப் பட்டால் அவற்றை அணுகுவதற்கான உரிமையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்குவது.
* சுருக்கமான தனிக்குறிப்பு அல்லது உறுப்பினர் தகுதியை இரத்து செய்வது (ஊழியர்கள் மட்டும்)
Termination
தீவிரமாக மீறப்படும் அரிய சந்தர்பங்களில், ProZ.com ஊழியர்கள் உடனடியாக சுருக்கமான தனிக்குறிப்பை(மற்றும் உறுப்பினர் தகுதியை) நீக்கலாம். பெரும்பாலான சமயங்களில், எது எப்படியானாலும், ProZ.com "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை" கொள்கை ஒன்றை பயன் படுத்துகிறது, அது நீக்குவதற்கு, கால்பந்து விளையாட்டில் உபயோகத்தில் இருக்கும், "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை"யை பயன் படுத்தும் முறையைப் போன்றது.
மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டைகள் ஊழியர்களால் மட்டுமே கொடுக்கப் படுகிறது. விதிமுறைகள், எண்ணினால் எடுத்துக்காட்டப் படுகின்றன, அட்டை காண்பிக்கப் பட்டது குறி்த்து வைத்துக் கொள்ளப் படும். "மஞ்சள் அட்டை" அல்லது "சிகப்பு அட்டை" எனும் சொற்கள் வெளிப்படையாக பயன் படுத்தப் படுகின்றன; மின்அஞ்சல் ஒன்று அனுப்பப் பட்டால், தலைப்பு வரியில், சொற்கள் தோன்றும்.
மஞ்சள் அட்டை வழங்கப் பட்ட-தளத்தை உபயோகிப்பவர், தளத்தை உபயோகிப்பதைத் தொடரலாம் (சில சமயங்களில் சில கட்டுப்பாடுகளுடன்), ஆனால், மற்றபடி, மேற்கொண்டு மீறினால் அது நீக்குவதில் சென்று முடியும் எனும் அறிக்கையின் கீழ் இருப்பார்கள். ஒரு நபரின் சுருக்கமான தனிக்குறிப்பு நீக்கப் பட்டால் ProZ.comமிற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.
Clarification
மேலே சொல்லப் பட்ட விதிமுறைகள் அல்லது விதிமுறைகள் அமுல் படுத்தப்படுவது குறித்து விளக்கம் தேவைப் பட்டால், தயவு செய்து உதவி வேண்டி மனுவை சமர்ப்பியுங்கள்.