விதிமுறைகள்
ProZ.comமை பயன் படுத்துவதற்கான விதிமுறைகள்
ProZ.comமின் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் சந்தோஷமான, விடைகளை நோக்கிச் செல்லும் சூழ்நிலையை நீட்டிக்க மற்றும் பாதுகாக்க பின்வரும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. தளத்தை பயன்படுத்துவதின் மூலம், நீங்கள், இந்த விதிமுறைகளை ஏற்று மற்றும் ஒப்புக்கொண்டு, அதன் படி நடந்து கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.
பிரிவு
தள விதிமுறை
2.1 |
வேலை பதிப்புக்களுக்கான மறுமொழிகள் அந்த வேலையில் இருக்கும் ஆர்வத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
ஒரு வேலையை பதிப்பித்தவரை (விலைப்புள்ளி பாரத்தைக் கொண்டு அல்லது நேரடியாக தொடர்பு கொண்டு) அந்த வேலையை முடிக்கும் எந்தவொரு ஆர்வமும் இல்லாமல் பதிப்பைக் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. |
2.2 |
பதிப்பித்தவரின் தொடர்புக்கான வேண்டுகோள் மதிக்கப்பட வேண்டும்.
ProZ.com ன் விலைப்புள்ளி முறை அல்லது வேறு குறிப்பிட்ட வகைகளில் தொடர்பு கொள்ளும்படி வேலை பதிப்பு விரும்புகின்ற போது, வேலை பதிப்பித்தவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடாது அல்லது அழைக்கக் கூடாது. பதிப்பித்தவரின் வேண்டுகோள் ஒரேயடியாக நிராகரிக்கப்படும் போது விலைப்புள்ளி செய்யும் உரிமை பறிக்கப்படலாம். |
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றுவது, தளத்தை பயன் படுத்துவதை மற்றும் அணுகு உரிமையை தொடர்ந்து பயன் படுத்துவதற்கான நிபந்தனையாகும்.
Enforcementமேற்கண்ட விதிமுறைகளை அமுல் படுத்த, ஊழியர்கள் மற்றும் தள விதிகளை அமுல்படுத்துபவர்கள்(moderators) பின்வரும் நடவடிக்கைகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்:
* குறிப்பிட்ட விதிமுறைகள் குறித்து, தளத்தை உபயோகிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க தொடர்புகொள்வது
* விதிமுறையை மீறிய சமர்பணத்திற்கு அனுமதி அளிப்பதை தவிர்ப்பது (அல்லது நீக்குவது/மறைப்பது)
* குறிப்பிட்ட உபயோகிப்பாளர்கள், குறிப்பிட்ட செயல்பாட்டை மேற் கொள்ளும் பொழுது, விதிமுறை தொடர்பான தகவலை தோன்ற வைப்பது
* தள சிறப்பம்சங்கள் விதிமுறையை மீறி பயன் படுத்தப் பட்டால் அவற்றை அணுகுவதற்கான உரிமையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்குவது.
* சுருக்கமான தனிக்குறிப்பு அல்லது உறுப்பினர் தகுதியை இரத்து செய்வது (ஊழியர்கள் மட்டும்)
Termination
தீவிரமாக மீறப்படும் அரிய சந்தர்பங்களில், ProZ.com ஊழியர்கள் உடனடியாக சுருக்கமான தனிக்குறிப்பை(மற்றும் உறுப்பினர் தகுதியை) நீக்கலாம். பெரும்பாலான சமயங்களில், எது எப்படியானாலும், ProZ.com "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை" கொள்கை ஒன்றை பயன் படுத்துகிறது, அது நீக்குவதற்கு, கால்பந்து விளையாட்டில் உபயோகத்தில் இருக்கும், "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை"யை பயன் படுத்தும் முறையைப் போன்றது.
மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டைகள் ஊழியர்களால் மட்டுமே கொடுக்கப் படுகிறது. விதிமுறைகள், எண்ணினால் எடுத்துக்காட்டப் படுகின்றன, அட்டை காண்பிக்கப் பட்டது குறி்த்து வைத்துக் கொள்ளப் படும். "மஞ்சள் அட்டை" அல்லது "சிகப்பு அட்டை" எனும் சொற்கள் வெளிப்படையாக பயன் படுத்தப் படுகின்றன; மின்அஞ்சல் ஒன்று அனுப்பப் பட்டால், தலைப்பு வரியில், சொற்கள் தோன்றும்.
மஞ்சள் அட்டை வழங்கப் பட்ட-தளத்தை உபயோகிப்பவர், தளத்தை உபயோகிப்பதைத் தொடரலாம் (சில சமயங்களில் சில கட்டுப்பாடுகளுடன்), ஆனால், மற்றபடி, மேற்கொண்டு மீறினால் அது நீக்குவதில் சென்று முடியும் எனும் அறிக்கையின் கீழ் இருப்பார்கள். ஒரு நபரின் சுருக்கமான தனிக்குறிப்பு நீக்கப் பட்டால் ProZ.comமிற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.
Clarification
மேலே சொல்லப் பட்ட விதிமுறைகள் அல்லது விதிமுறைகள் அமுல் படுத்தப்படுவது குறித்து விளக்கம் தேவைப் பட்டால், தயவு செய்து உதவி வேண்டி மனுவை சமர்ப்பியுங்கள்.