விதிமுறைகள்
ProZ.comமை பயன் படுத்துவதற்கான விதிமுறைகள்
ProZ.comமின் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் சந்தோஷமான, விடைகளை நோக்கிச் செல்லும் சூழ்நிலையை நீட்டிக்க மற்றும் பாதுகாக்க பின்வரும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. தளத்தை பயன்படுத்துவதின் மூலம், நீங்கள், இந்த விதிமுறைகளை ஏற்று மற்றும் ஒப்புக்கொண்டு, அதன் படி நடந்து கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.
பிரிவு
தள விதிமுறை
1 |
மொழிபெயர்ப்பு வேலையளிப்பவர்கள், துபாஷி மற்றும் பிற மொழி-சம்பந்தமான வேலை, மற்றும் குறிப்பிட்ட வேலையளிப்பவர்களிடம் மீண்டும் வேலை செய்ய விருப்பம் தெரிவிப்பதற்கும் ஒரு கருத்து வளமாக ProZ.com Blue Board கொடுக்கப்பட்டுள்ளது.
Blue Board ஐ மற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது. |
2 |
Blue Board உள்ளீடுகள் செய்யப்படுவதற்கு முன்பு சில கட்டுப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட வேலையளிப்பவர்களிடம் மீண்டும் வேலை செய்ய விருப்பமுள்ளதை தெரிவிக்க இதற்கு மட்டும் தான் அனுமதியுண்டு (1) கொடுக்கப்படுகின்ற வேலை முழுமையாக குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது, மற்றும் (2) கொடுத்த பிறகு அதன் தரம் குறித்த புகார்கள் வரவில்லை. பேச்சுவார்த்தைகள், மொழிபெயர்ப்புச் சோதனைகள், அல்லது பிற ஆரம்ப நிலை அல்லது பணம் கொடுக்கப்படாத தொடர்புகளின் அடிப்படையில் உள்ளீடுகள் செய்யக்கூடாது. |
3 |
ஓர் உள்ளீட்டுக்கான பதில் கிடைத்தவுடன் அதனை திருத்தம் செய்ய இயலாது.
ஒரு சேவையை வழங்குபவர் ஒரு குறுகிய உள்ளீடு மட்டும் தான் செய்ய அனுமதியுண்டு, மற்றும் அந்த வேலையளிப்பவர் ஒரு சுருக்கமான பதில் அனுப்ப தான் அனுமதிக்கப்படுவார். (பதில் கிடைக்கின்ற வரையில் அந்த உள்ளீட்டை திருத்தம் செய்ய இயலும் என்பதை கவனத்தில் கொள்க.) |
4 |
பதில்களை சமர்ப்பித்தவுடன் அவற்றை திருத்தம் செய்ய இயலாது.
|
5 |
ஓர் ஆண்டில், ஒரு வேலையளிப்பவரிடமிருந்து ஓர் உள்ளீட்டை பெற மட்டும் தான் தளத்தின் பயனர்கள் அனுமதிக்கப்படுவர்.
கடைசி உள்ளீடு செய்தது முதல் கூடுதலான வேலை செய்யப்பட்டிருக்கிறது என்ற கட்டுப்பாட்டின் கீழ், ஆண்டுக்கொரு முறை கூடுதலான உள்ளீடுகள் சேர்க்கப்படலாம். |
6 |
சுய-உள்ளீடுகள் அனுமதிக்கப்படாது.
Blue போர்ட்டில் பட்டியலிடப்பட்டிருக்கும் வேலையளிப்பவர்கள், மற்றும் வேலை கொடுக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையாட்கள், தங்களிடமோ அல்லது தங்களது நிறுவனங்களிடமோ “மீண்டும் வேலை செய்யும் சாத்தியக்கூறு” என்ற உள்ளீடுகளை செய்யக் கூடாது. |
7 |
அவதூறு செய்யப்படுவது அனுமதிக்கப்படாது.
Blue போர்ட்டைக் கொண்டு எந்தவொரு நபரையோ அல்லது வியாபாரத்தையோ அவதூறு செய்ய பயன்படுத்தக்கூடாது. உள்ளீடுகள், உள்ளீடுகளைத் தொடர்கிற கருத்துக்கள், மற்றும் உள்ளீடுகளுக்கான பின்னூட்டங்கள் ஆகியவை, மீண்டும் வேலை செய்ய விரும்புவதைப் பற்றி மட்டும் தான் இருக்க வேண்டும். |
8 |
Blue போர்ட்டை ஒருவர் பயன்படுத்துவதை மாற்றுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது.
ஒரு Blue போர்ட் உள்ளீடு அல்லது பதிலை மாற்றுவதற்கு, அல்லது ஒரு புதிய உள்ளீடு அல்லது ஒரு குறிப்பிட்ட தன்மையுடைய பதிலைக் கொடுப்பதற்கு ஒருவரை கட்டாயப்படுத்துவது அனுமதிக்கப்படாது. (இந்த எந்தவொரு பதிப்புக்களின் உள்ளடக்கத்தின் மீதும் செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றும் முயற்சிகள் ஏதும் இல்லையென்றால், சேவை வழங்குபவர்களை அல்லது வேலையளிப்பவர்களை உள்ளீடுகள் அல்லது பதில்கள் கொடுக்க அழைப்பது ஏற்றுக்கொள்ளப்படும்.) |
9 |
மிரட்டுவதற்கு Blue போர்ட் பயன்படுத்தக் கூடாது.
Blue போர்ட்டை பயன்படுத்துவது, அல்லது Blue போர்ட்டை பயன்படுத்த மிரட்டுவதன் மூலம் வேலையளிப்பவர் அல்லது சேவை வழங்குபவர் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செல்வாக்கைப் பயன்படுத்துவது, வன்மையாக தடுக்கப்படுகிறது. |
10 |
எந்த வடிவிலான வேலை கொடுக்கும் நடவடிக்கையும் நடந்து முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, Blue போர்ட் குறிப்புக்களில் தொடர்ந்து இருக்கும்.
குறிப்பிட்ட காரணங்களை வேலையளிப்பவர்கள் கொடுத்தால், சில தகவல் விவரங்களை Blue போர்ட்டிலிருந்து நீக்கும் கோரிக்கைகளை ProZ.com பரிசீலிக்கும். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில், ஆகக்கடைசியாக தெரிந்த வேலையளிப்பவரின் நடவடிக்கை நடந்து முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்படிப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது. |
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றுவது, தளத்தை பயன் படுத்துவதை மற்றும் அணுகு உரிமையை தொடர்ந்து பயன் படுத்துவதற்கான நிபந்தனையாகும்.
Enforcementமேற்கண்ட விதிமுறைகளை அமுல் படுத்த, ஊழியர்கள் மற்றும் தள விதிகளை அமுல்படுத்துபவர்கள்(moderators) பின்வரும் நடவடிக்கைகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்:
* குறிப்பிட்ட விதிமுறைகள் குறித்து, தளத்தை உபயோகிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க தொடர்புகொள்வது
* விதிமுறையை மீறிய சமர்பணத்திற்கு அனுமதி அளிப்பதை தவிர்ப்பது (அல்லது நீக்குவது/மறைப்பது)
* குறிப்பிட்ட உபயோகிப்பாளர்கள், குறிப்பிட்ட செயல்பாட்டை மேற் கொள்ளும் பொழுது, விதிமுறை தொடர்பான தகவலை தோன்ற வைப்பது
* தள சிறப்பம்சங்கள் விதிமுறையை மீறி பயன் படுத்தப் பட்டால் அவற்றை அணுகுவதற்கான உரிமையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்குவது.
* சுருக்கமான தனிக்குறிப்பு அல்லது உறுப்பினர் தகுதியை இரத்து செய்வது (ஊழியர்கள் மட்டும்)
Termination
தீவிரமாக மீறப்படும் அரிய சந்தர்பங்களில், ProZ.com ஊழியர்கள் உடனடியாக சுருக்கமான தனிக்குறிப்பை(மற்றும் உறுப்பினர் தகுதியை) நீக்கலாம். பெரும்பாலான சமயங்களில், எது எப்படியானாலும், ProZ.com "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை" கொள்கை ஒன்றை பயன் படுத்துகிறது, அது நீக்குவதற்கு, கால்பந்து விளையாட்டில் உபயோகத்தில் இருக்கும், "மஞ்சள் அட்டை/சிகப்பு அட்டை"யை பயன் படுத்தும் முறையைப் போன்றது.
மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டைகள் ஊழியர்களால் மட்டுமே கொடுக்கப் படுகிறது. விதிமுறைகள், எண்ணினால் எடுத்துக்காட்டப் படுகின்றன, அட்டை காண்பிக்கப் பட்டது குறி்த்து வைத்துக் கொள்ளப் படும். "மஞ்சள் அட்டை" அல்லது "சிகப்பு அட்டை" எனும் சொற்கள் வெளிப்படையாக பயன் படுத்தப் படுகின்றன; மின்அஞ்சல் ஒன்று அனுப்பப் பட்டால், தலைப்பு வரியில், சொற்கள் தோன்றும்.
மஞ்சள் அட்டை வழங்கப் பட்ட-தளத்தை உபயோகிப்பவர், தளத்தை உபயோகிப்பதைத் தொடரலாம் (சில சமயங்களில் சில கட்டுப்பாடுகளுடன்), ஆனால், மற்றபடி, மேற்கொண்டு மீறினால் அது நீக்குவதில் சென்று முடியும் எனும் அறிக்கையின் கீழ் இருப்பார்கள். ஒரு நபரின் சுருக்கமான தனிக்குறிப்பு நீக்கப் பட்டால் ProZ.comமிற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.
Clarification
மேலே சொல்லப் பட்ட விதிமுறைகள் அல்லது விதிமுறைகள் அமுல் படுத்தப்படுவது குறித்து விளக்கம் தேவைப் பட்டால், தயவு செய்து உதவி வேண்டி மனுவை சமர்ப்பியுங்கள்.