ProZ.com பணி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது

ProZ.com பணி அமைப்பு வழியாக மொழிப் பணிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதன் எளிய விளக்கம்.


1. ஒரு பணிவழங்குனர் மொழிபெயர்ப்பு அல்லது உரைபெயர்ப்பு பணியைப் பதிவிடுவார்

அந்தப் பணிப் பதிவிடலில் மொழி இணைகள், திட்டப்பணி விவரங்கள், விலைக்குறிப்பு காலக்கெடு போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும். பணியைப் பதிவிடுபவருக்கும் பணிக்கான நாட்டக மொழி, இருப்பிடம் போன்ற குறிப்பிட்ட வரையறைகளைக் குறிப்பிடும் வசதி உண்டு.

ProZ.com இல் இலவசமாகப் பணியைப் பதிவிடலாம்

2. பணியாற்ற விருப்பமுள்ள மொழி வல்லுனர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள்

பணியில் விருப்பமுள்ளவர்களும் பணி வரையறைகளைப் (ஏதேனும்) பூர்த்தி செய்பவர்களும், பதிவிடுபவருக்கு பணிக்கோரலைச் சமர்ப்பிக்கலாம்.

3. பணிவழங்குனர் தேவையான சேவை வழங்குனரைத் தேர்வுசெய்து அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்வார்

சில பணிக்கோரல்கள் வந்த பின், பணிக்குத் தேவைப்படும் ஒன்று அல்லது மேற்பட்ட சேவை வழங்குனர்களை பணிவழங்குனர் தேர்வுசெய்து அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். ProZ.com எந்த முகவர் சேவைக் கட்டணமும் விதிப்பதில்லை.

4. பணி நிறைவடைந்ததும் விரும்பினால் வழங்குவதற்கு பின்னூட்டம் அளிக்கும் வசதியும் உள்ளது

பணி முடிவடைந்த பின், பணி பதிவிடுபவரும் சேவை வழங்குனரும் ஒருவருக்கொருவர் பின்னூட்டம் வழங்கிக் கொள்ளலாம்.*

*சேவை வழங்குனர் தனது சுயவிவரத்தின் மூலம் பின்னூட்டத்தை அனுமதிக்க வேண்டும்.



பணி அமைப்பு பற்றிய மேலும் தகவலுக்கு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கவும்