ProZ.com இணையதளத்தில் வேறு சில பட்டியலகங்களும் உள்ளன, அவற்றுள் சிலவற்றின் தொகுப்பைக் கீழே காணலாம்.
இதுவே மொழிபெயர்ப்புத் தொழிற்துறையில் மிகவும் பிரபலமான பட்டியலகமாகும், இது பணிவழங்குபவர்கள் ProZ.com இல் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களைக் கண்டறிய வழிசெய்யும் முக்கிய அமைப்பாக விளங்குகின்றது. 20க்கும் மேற்பட்ட தேடல் கூறுகளுடன் 250,000 தனித்தியங்கும் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களுள் தேடலாம். தேடல் முடிவுகள் இரண்டு வகையான முடிவுகளாகப் பிரிக்கப்படும்: முதல் பிரிவில் (பணம்செலுத்தும்) உறுப்பினர்கள் அடங்கியிருப்பர், இரண்டாவது பிரிவில் பணம்-செலுத்தாமல் பதிவுசெய்திருப்பவர்கள் இருப்பர். இயல்புநிலையாக, ஒவ்வொரு முடிவுகள் பிரிவும் KudoZ புள்ளிகளின்படி வரிசைப்படுத்தப்பட்டிருக்கும், அதிகமான மொத்த KudoZ புள்ளிகள் கொண்ட உறுப்பினர்கள் (மொழி இணை மற்றும் தேடிய துறை) முதன்மை நிலைக்கு நெருக்கமாகப் பட்டியலிடப்படுவார்கள்.
செயல்படும் முறை: ஒரு ProZ.com பயனர் ("சேவை வழங்குநர்") ஒரு குறிப்பிட்ட பணி வழங்குநருக்கு 1 முதல் 5 எண்களுக்குள் ஒரு எண்ணைத் தனது "மீண்டும் பணிபுரியும் விருப்பத்தின்" (LWA) அடிப்படையில் உள்ளிடலாம். விளக்கம் தருவதற்கான செய்தியை ("கருத்து") ஒரு வரிக்கு எண்ணுடன் சேர்த்து உள்ளிடலாம். பெற்றுள்ள பதிவுகளுக்குப் பதிலளிக்க பணிவழங்குனரும் ஒரு வரியில் பதிலை ("பதில்") உள்ளிடலாம்.
வழங்கப்படும் மொழிகள், சேவைகள், துறைப் பகுதிகள், இருப்பிடம் என்பவற்றின் அடிப்படையில் 20000க்கும் அதிகமான மொழிபெயர்ப்பு நிறுவனங்களில் தேடலாம்.
மொழிபெயர்ப்பாளர்கள், உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவனங்களின் மேம்பட்ட பட்டியலகம்.