KudoZ™ மொழிபெயர்ப்பு உதவிக் கூட்டமைப்பு

KudoZ™ மூலம் ProZ.com பயனர்கள் ஒருவருக்கொருவரும், விருந்தினர்களுக்கும், கடினமான சொற்களை மொழிபெயர்ப்பதற்கு இலவச உதவி வழங்கலாம்.





கடினமான சொல்லை மொழிபெயர்ப்பதில் சிக்கலா? KudoZ கேள்வியைப் பதிவிடவும்

ஒரு சொல் அல்லது சொற்றொடரை மொழிபெயர்க்க உதவ, KudoZ கேள்வியைப் பதிவுசெய்து அதன் சூழல், இலக்கு மொழி, மற்றும் பிற தேவையான தகவலை வழங்கவும். உங்கள் கேள்வியைப் பதிவுசெய்த பின், ProZ.com பயனர்கள் விளக்கங்களுடன் மொழிபெயர்ப்புகளைப் பரிந்துரைப்பார்கள், சிலநேரங்களில் குறிப்புதவிகளையும் தருவார்கள்.





பதில்களுக்காகக் காத்திருந்து, மிகவும் பயனுள்ள பதிலைத் தேர்வுசெய்யவும்

போதுமான பதில் வந்த பின்னர், மிகவும் பயனுள்ள பதிலைத் தேர்வுசெய்யலாம். தேர்வுசெய்யப்பட்ட பதிலை வழங்கிய நபருக்கு சில KudoZ புள்ளிகள் வழங்கப்படும். KudoZ புள்ளிகள், பட்டியலகத்தில் மொழிபெயர்ப்பாளர்களையும் உரைபெயர்ப்பாளர்களையும் வரிசைப்படுத்த உதவும் முக்கியமான அடிப்படையாகும்.





கேள்வியும் தேர்வுசெய்யப்பட்ட பதிலும் காப்பகப்படுத்தப்படும்

கேள்வியும் பரிந்துரைக்கப்பட்ட மொழிபெயர்ப்பும் சேமிக்கப்பட்டு, அதுமுதல் அனைவருக்கும் பயன்படும்படி கிடைக்கும்.